உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளை மாநில சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் இன்று ஆய்வு செய்தார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர்,
கர்வால் பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது அங்கு மட்டும் சாவு எண்ணிக்கை 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை இருக்கும் என்று நம்பினேன். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. எனவே, தற்போதுள்ள நிலவரப்படி பார்த்தால், வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்.
தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆங்காங்கே கிடக்கும் உடல்களை உடனடியாக அப்புறப்படுத்த அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை,, இயற்கை சீற்றத்தின் கோரத்தாண்டவம் நடந்து 14 நாட்கள் ஆகியும் சாவு எண்ணிக்கையை உறுதியாக கூற முடியவில்லை. 1000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக முதல்வர் விஜய் பகுகுணா கூறினார். இடிபாடுகள் மற்றும் குப்பைகளில் சிக்கியிருக்கும் உடல்களை மீட்டபிறகுதான், இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதியாக கூற முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !