Headlines News :
Home » » பக்தி முத்தி பரவசத்தில் கணவனின் கண்களை குத்தி குருடாக்கிய மனைவி!

பக்தி முத்தி பரவசத்தில் கணவனின் கண்களை குத்தி குருடாக்கிய மனைவி!

Written By TamilDiscovery on Saturday, June 29, 2013 | 12:10 PM

பக்தி பரவசத்தில் கணவனின் கண்களை குத்தி குருடாக்கிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லப்பன்(வயது 40), இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவனும்- மனைவியும் கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மல்லப்பனின் கண்களை அவரது மனைவி காளியம்மாள் விரல்களால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது கண்களில் படுகாயம் ஏற்பட்டது. வலியால் அலறிதுடித்த மல்லப்பனை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், மல்லப்பன் கண்களின் கருவிழிகள் கடுமையாக சேதம் அடைந்ததால் அவரது பார்வையை மீட்க முடியவில்லை.

கணவனின் கண்களை மனைவி குத்த காரணம் என்ன? என்று விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கடந்த புதன்கிழமை கணவனும்- மனைவியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டின் கதவை தாழிட்டுக் கொண்டு பூஜை செய்துள்ளனர். 2 நாட்கள் உணவு ஏதும் சாப்பிடாமல் தொடர்ந்து பூஜையில் ஈடுபட்டபோது பக்தி பரவசத்தில் திடீரென மல்லப்பனின் கண்களை அவரது மனைவி காளியம்மாள் குத்தியது தெரியவந்துள்ளது.

மேலும், காளியம்மாள் சற்று மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர் என்றும் தெரியவந்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template