5 ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தினை பரீட்சித்துப் பார்த்த்தில் ஒரே செக்கனின் முழுத் திரைப்படமொன்றினை தரவிறக்கும் அதி வேகத் திறமை கொண்டதென கண்டறிந்ததாக இன்று சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 5 ஜி தொழில்நுட்பமானது பரீட்சித்துப் பார்கையில் இதன் வேகம் செக்கனுக்கு ஜிகா பைட் வேகம் கொண்டது என ஆதாரபூர்வமாக அறிய முடிந்ததாக சம்சுங் நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பில் அந்நிறுவனம் மேலும் கூறுகையில், இப்புதிய 5ஆம் தலைமுறை தொழில்நுட்பமான 5 ஜி இப்போது வணிக ரீதியான சந்தையில் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்த முடியாது.
சாதாரணமாக இந்த 5 ஜி தொழில்நுட்பத்தின் இணைய வேகமானது 4 ஜி போன்று பல நூறு மடங்கு அதிகமானது. எனவே வாடிக்கையாளர்களுக்கு 3டீ கேம்ஸ், உயர் ரக துல்லிய விடீயோக்கள் உள்ளிட்ட பாரிய தரவு பரிமாற்ற சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மேலும் இக்கம்பில்லா தொழில்நுட்பத்தின் மூலம் கூடிய தூரத்திற்கு விரைவான தரவுப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம் என தென் கொரியாவை மையமாகக்கொண்ட நிறுவனம் சம்சுங் தெரிவித்துள்ளது.
உலகின் அதிகளவான 4 ஜி வாடிக்கையாளர்களைக்கொண்ட நாடு தென கொரியாவாகும். தற்போது அங்கு 20 மில்லியன் 4 ஜி வாடிக்கையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home »
Technology
» சம்சுங் நிறுவனம் 5 ஜி தொழில்நுட்ப சோதனை: 1 செக்கனில் முழுத்திரைப்படம் தரவிறக்கும் அதி வேகத்திறன்.
சம்சுங் நிறுவனம் 5 ஜி தொழில்நுட்ப சோதனை: 1 செக்கனில் முழுத்திரைப்படம் தரவிறக்கும் அதி வேகத்திறன்.
Written By TamilDiscovery on Monday, May 20, 2013 | 2:46 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !