அமெரிக்க இராணுவத்தின் இரகசியத்தை விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு தெரிவித்தது உள்பட பல வழக்குகளில் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏ, உலகம் முழுவதும் உள்ள இணையதளங்களில் இரகசியமாக ஊடுருவி தகவல்களை திரட்டியதாக அதன் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் தெரிவித்தார்.
இதனால் அவரை அமெரிக்கா கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, அவர் மொஸ்கோவில் தஞ்சம் அடைந்தார். ஏற்கனவே விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை கைது செய்ய அமெரிக்கா மறைமுக முயற்சிகளை மேற்கொண்டதை அடுத்து விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்க இராணுவ இரகசியங்களை தெரிவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின்பேரில் இராணுவ அதிகாரி பிராட்லி மேன்னிங் என்பவரை அமெரிக்க பொலிசார் கைது செய்தனர். பிராட்லி மீது இராணுவ இரகசியங்களை கசிய விட்டது, எதிரிக்கு உதவியது உள்பட 21 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இதில் 19 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார். பிராட்லி தனது கூட்டாளி டேனியல் எல்ஸ்பெர்க் என்பவருடன் இணைந்து, 1970ல் நடந்த வியட்நாம் போரின் போது அமெரிக்கா செய்த தகிடுதத்தங்களை, பென்டகனில் இருந்து சுருட்டிய ஆவணங்களில் பெற்ற தகவல்கள் மூலம் விக்கி லீக்ஸ் ஊடாக வெளியுலகிற்கு தெரிவித்தார்.
இதனால் 25 வயது இளைஞரான பிராட்லி மேன்னிங் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார்.
இவரது வழக்கில் 16 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அவருக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !