
சிறுமியின் தாயார் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் தனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 10இல் பயின்று வருகிறார். கடந்த ஜூலை மாதம் 7ஆம் திகதி சிறுமி திடீரென காணாமற்போயுள்ளதாக அவரது பாட்டி தங்கொட்டுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
காதல் தொடர்பு வைத்திருந்த இளைஞன் தன்னை அழைத்துச் சென்று பிலியந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்ததாகவும் அங்கு தாம் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது பாட்டி மீண்டும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தங்கொட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !