'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பார்கள். அதேபோல அவலட்சனமான உடல் உறுப்புகளினால் மட்டுமல்ல, ஆகவும் பெருத்த உறுப்புகளினால் உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் பல்வேறான சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
நபரொருவரின் ஆணுறுப்பு ஆகவும் பெருத்தமையினால் அதனை அகற்றிய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வெக்ஸைச் சேர்ந்த நபரொருவரின் ஆணுறுப்பானது ஆகவும் பெருத்திருந்தமையினால் அவரது உறுப்பானது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
இவரது ஆணுறுப்பானது சாதாரண ஆண்களுக்கு இருப்பது போன்று இல்லாது பல மடங்கு பெரிதாக காணப்பட்டதால் இவரால் தாம்பத்திய வாழ்வில் கூட ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைவிட மேற்படி நபர் காற்சட்டை அணிவதற்கும் வீதியில் நடந்துசெல்வதற்கும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். 49 வயதுடைய வெலஸ்லி வோர்ன் என்ற நபரே இத்தகைய விபரீதமான நோய்க்கு உள்ளாகியிருந்தார்.
இவரது ஆணுறுப்பானது காண்டாமிருகத்தின் குட்டியொன்றின் பருமனை ஒத்து காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெஸ்லிக்கு ஆணுறுப்பானது கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்தே பெருத்துள்ளது. இந்நிலையில் வழமைக்கு மாறான தனது ஆணுறுபின் தோற்றத்தால் அவதிப்பட்ட மேற்படி நபர் சிறிதாக்குவதற்காக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். எனினும், மருத்துவ சிகிச்சைகளில் எவ்வித பயனும் ஏற்படாத காரணத்தினால் இறுதியில் ஆணுறுபையே அகற்றும் நிலை அவருக்கு ஏற்பட்டது.
'ஆணுறுப்பானது சத்திர சிகிச்சையினூடாக அகற்றப்பட்டதால் நான் வழமைக்கு திரும்பிவிட்டதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிலர் நினைக்கக்கூடும். ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல' என மேற்படி நபர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !