விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனைகளான மரியா ஷரபோவாவுக்கும், செரீனா வில்லியம்ஸுக்கும் இடையே கடும் வாய்ச்சண்டை வெடித்துள்ளது.
உலகின் முதற்தர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். இவருக்கும், மரியாவுக்கும் இடையே அவ்வப்போது ஏதாவது சின்னச் சின்ன சண்டை ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், ஒரு பாலியல் பலாத்கார வழக்கு குறித்து செரீனா தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை விமர்சித்துள்ள மரியா, செரீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கடுமையாக கிண்டலடித்துள்ளாராம். அமெரிக்காவில் இரண்டு பாடசாலை மாணவர்களால், 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்து செரீனா வில்லியம்ஸ் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் இதற்காக மன்னிப்பு கேட்டார் செரீனா. இந்த விவகாரம் குறித்து மரியா ஷரபோவா கூறுகையில், செரீனா சொன்ன கருத்து மிகவும் மோசமானது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
செரீனா வில்லியம்ஸ் தனது சாதனைகளை முதலில் பார்க்கட்டும், அதுகுறித்துப் பேசட்டும். அடுத்தவர்கள் குறித்து வாய்த் துடுக்காக பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் மரியா. அதேபோல தன் ஆண் நண்பரான, பல்கேரிய வீரர் கிரிகர் டிமிட்ரோவ் குறித்து செரீனா தெரிவித்த கருத்துக்களுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களின் ஆண் நண்பர்களை குறித்து கருத்துச் சொல்ல செரீனாவுக்கு உரிமை இல்லை. அவரது ஆண் நண்பர் குறித்துப் பேசட்டும்.. அவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதைக் குறித்துப் பேசட்டும். அவருக்கு குழந்தைகள் இருப்பது குறித்துப் பேசட்டும்... எனக் கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !