இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக களுத்துறை மாவட்ட பாலியல் நோய்கள் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் ஹிமாலி பெரேரா தெரிவித்தார்.
கடந்த வருடம் 24 ஆயிரமாக இருந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை இக்காலப்பகுதியில் 37ஆயிரமாக உயர்வடைந்துள்ளதாகவும் சுட்டிகாட்டினார்.
பொலிஸார் மற்றும் விடுதி உரிமையாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
15 வயது முதல் 45 வயது வரையானவர்களே பெரும்பாலும் பாலியல் நோய்களுக்குள்ளாகுவதாகவும் வதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் இயற்க்ககைக்கு மாறான உறவைப் பேணுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாடுகள் இவர்களின் உறவுகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எனினும் அந்நாடுகளில் இவர்களின் உறவுகளுக்கு அதிகமான எதிர்ப்புகளும் உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !