சிம்பாவேயில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் சரணாலயத்தில் அதிகளவான யானைகளை கொலை செய்து தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சிம்பாவேயின் மிகப்பெரிய வனவிலங்குகள் சரனாலையமான வாங்கோ தேசிய பூங்காவில் 80 ஆயிரம் யானைகள் உள்ளன.
இந்த சரணாலயத்தில் நீர்நிலைகளின் சுற்று வட்டாரத்தில் யானைகள் தந்தங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்ததது அண்மையில் தெரிய வந்தது.
யானைகள் தண்ணீர் குடிக்க வரும் நீர் நிலையில் சயனைட் விசத்தை கலந்து கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவமானது வனவிலங்கு ஆர்வலர்களை பெரும் அதிர்சிக்குள்ளக்கியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சிம்பாவே சுற்றுசூழல் துறை அமைச்சர், வேட்டை கும்பலுக்கு 9 ஆண்டு சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் சட்டத்தில் உள்ளபோதும், அவர்களைக் கட்டுப் படுத்துவதில் கடுமையான சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !