மத்திய பிரதேசத்தில் கலெக்டர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் நீமூச் மாவட்டத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது, இதனால் மக்கள் கடும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதும், சுகாதார பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் தான் காரணம் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இம்மாவட்ட கலெக்டர் விகார் நர்வாஸ், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இதனை பார்த்து ஆச்சரியமடைந்த பொதுமக்கள், தாங்களும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ஒரு மாவட்ட நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர், தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கலெக்டரும் இதில் பங்கு கொண்டு மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !