இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தி மூலம் இயங்கக் கூடிய ஐ.என்.எஸ். அரிஹந்த் கப்பல் செயல்பட தொடங்கியுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்திலிருந்து ஐ.என்.எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் கடற்படையிடம் முறைப்படி வழங்கப்பட்டது.
இந்த அரிஹந்த் கப்பல் அணு உலை மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்த கப்பல் நிலம், காற்று, நீர் என மூன்று தளங்களிலும் வரும் ஏவுகனைகளை தடுக்கும் வல்லமை பெற்றது. அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விசாகப்பட்டினம் கடற்படை நீர்மூழ்கி கப்பல் தளத்தில் இருந்து பரிசோதிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் செயல்படத் தொடங்கியதற்காக விஞ்ஞானிகளுக்கும் கடற்படையினருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !