பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மெரிக்க ராணுவத்தில் பயிற்சியாளர்களாக பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர்.
சமீபகாலமாக அமெரிக்க ராணுவத்தில் செக்ஸ் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணுவத்தில் பணிபுரியும் ஆண் வீரர்களாலேயே பெண் வீரர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கப்படுவதாக பெண்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணயில் 60 பயிற்சியாளர்கள் செக்ஸ் குற்றம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவ அமைச்சர் ஷாக் ஹாகெல் உத்தரவிட்டார். அதன்படி, ராணுவப் பயிற்சியாளர்கள் 55 பேரும், கடற்படை பயிற்சியாளர்கள் ஐவரும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருவதால் பணி நீக்கம் செய்யப் படுபவர்களின் எண்ணிக்கை கூடலாம் என தெரிகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !