பதுளை, வெலிகட பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடத்தொகுதியொன்றின் மலசல கூடத்தில் வைத்து பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய நபரொருவர் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மலசல கூடத்தினுள் நுழைந்த வேளையில் அங்கு ஒளிந்திருந்த சந்தேகநபர் பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அப்பெண் சத்தமிடவே அங்கிருந்த சிலர் குறித்த நபரைப் பிடித்து தாக்கியுள்ளதுடன் அவரை பொலிஸிலும் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபர் 31 வயதான மேசன் ஒருவர் எனவும் சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவருகின்றது.
சம்பவத்தின் போது அவரிடம் ஆணுறைகளும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !