ஒரு ஆண்டுக்கு ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் அஜித்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம், அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என கடந்த பல மாதங்களாகவே அஜித் பயங்கர பிஸி. இந்தநிலையில் அவருக்கு இருந்த கால்வலியை கூட அவரால் கவனிக்க முடியவில்லை.
எனவே ஷாலினி மற்றும் மகளின் கோரிக்கையை ஏற்று ஒரு வருடத்திற்கு ஓய்வெடுத்து கால்வலி பிரச்சினையை சரிசெய்ய அஜித் தீர்மானித்துள்ளார். சிறுத்தை சிவாவின் படத்திற்காக சுவிட்சர்லாந்து பயணம் முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கும் அவர் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
வெயில் மட்டுமல்ல பனியும் கூட நிறத்தை மாற்றிவிடும் லேசாக கறுத்துப் போயிட்டேன்ல. சென்னை வந்துட்டேன்ல இனி கலர் வந்திடும்.
‘ஆரம்பம்´ படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்து விட்டது. விரைவில் வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும். நாகிரெட்டி தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கும் படமும் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்து விட்டது.
பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படங்களுக்குப் பின்னர் ஒரு வருடத்திற்கு ரெஸ்ட்தான். கால்வலி பிரச்சினையை சரி செய்யணுமே!. ஒன்றரை வருடமா அந்த வலியோடவே நடமாடிட்டு இருக்கேன். இரவு, பகல் பாக்காம கடுமையாக உழைக்கிறோம். அதனால கோடிக்கணக்கில சம்பளம் வாங்கிறோம். சம்பளம் வாங்குறதுக்கும் இலஞ்சம் வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கே என்றார்.
மற்றும் அவரிடம் அரசியல் குறித்து கேட்டதற்கு:
நம்ம நாட்ல ஊருக்கொரு கட்சி..., சாதிக்கொரு கட்சி..., சந்துக்கொரு ரவுடின்னு நிறைய இருக்கு இதுல நான் வேற வந்து சிக்கணுமா? எனக்கு வேண்டாமே. என்றார்.
புதிதாக வாங்கியிருக்கும் பைக்கில் நீண்ட பயணம் போகவேண்டும் என்பது அஜித்தின் ஆசை. இதற்கான பாதுகாப்பு உடைகளை சுவிட்சர்லாந்தில் வாங்கியிருக்கிறாராம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !