தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு விஜய் உதவி வழங்கினார். கடந்த 10 வருடங்களாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்களையும், கல்வி உதவித் தொகையையும் விஜய் வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் செலவில் ஜே.எஸ் திருமண மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், கல்வி உதவித் தொகையையும் விஜய் வழங்கினார். அது மட்டுமின்றி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு வெள்ளி பதக்கம், கேடயம், சான்றிதழ்களை வழங்கி அவர்களை கௌரவப்படுத்திய பின்பு அவர்களுக்கு அறுசுவை உணவுகளையும் அவரே பரிமாறினார்.
பின்பு மாணவர்களிடம் பேசிய விஜய், உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால் தரமான கல்வியால் மட்டுமே முடியும். எனவே நமது நாட்டுக்காகவும், நமது ஊருக்காகவும், நமது குடும்பத்துக்காகவும் பொறுப்புடன் படித்து நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளரும் முன்னாள் M.L.A N.ஆனந்த், செயலாளர் ரவிராஜா, துணைத்தலைவர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் A.C குமார், மாநல செய்தி தொடர்பாளர் P.T.செல்வகுமார் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !