Headlines News :
Home » » 80 உயிர்களைப் பலியெடுத்த பேஸ்புக் ஸ்டேட்டஸ்!

80 உயிர்களைப் பலியெடுத்த பேஸ்புக் ஸ்டேட்டஸ்!

Written By TamilDiscovery on Tuesday, July 30, 2013 | 12:38 AM

ஸ்பெயினில் 80 பேரை பலி கொண்ட ரயில் விபத்துக்கு டிரைவரின் கவனக்குறைவே காரணம் என்று தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாத கவனகுறைவாக அதிவேகத்தில்ரயிலை இயக்கிய அந்த டிரைவர் தனது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் ‘ இப்போது அதிவேகமாக ரயிலை ஓட்டிக்கொண்டிருப்பதாக ("What joy it would be to get level with the police and then go past them making their speed guns go off. Ha ha!.") பதிவு வேறு செய்துள்ளார்.

ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் இருந்து பெரோல் நகருக்கு வந்து கொண்டிருந்த ரயில் கடந்த 25ம் தேதி தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதில் 80 பயணிகள் பலியாகினர்.

80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 190 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் 2 டிரைவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் பிரான்சிஸ்கோ ஜோஸ் கர்சான் அமோ (52) என்பவர் ரயிலை ஓட்டியபோதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது.

ரயிலை கவனக்குறைவாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரிடம் போலீசார் விசாரித்த போது எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. வேகமாக ரயில் ஓட்டுவதில் கர்சான் ஆர்வம் கொண்டவர் என தெரியவந்துள்ளது. ரயில் விபத்துக்கு முன்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், 200 கி.மீ. வேகத்தை காட்டும் ஸ்பீடாமீட்டர் படத்தை வெளியிட்டு, ‘ நான் உச்சகட்ட வேகத்தில் இருக்கிறேன், இதை விட வேகமாக போனால் எனக்கு அபராதம் விதிப்பார்கள்’ என்ற வாசகத்தை எழுதியுள்ளார். போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்தது.

டிரைவர் மீது தற்போது வேலையில் அலட்சியம், கவனக்குறைவு, கொலை குற்றம் என அடுக்கடுக்காக குற்றம்சாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி





Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template