பாகிஸ்தானில் நச்சுத் தன்மையான மதுபானத்தை அருந்தியதால் 18 பேர் பலியானதுடன் 24 பேர் சுகவீனமடைந்துள்ளனர்.
பைஸலாபாத்தில் பிறந்த நாள் வைபவம் உட்பட இரு விருந்துபசாரங்களில் கலந்து கொண்ட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தொழிலாளிகளே நச்சுத்தன்மையான மதுபானத்தை அருந்தியதால் மரணமாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே மதுபானத்தை வாங்கவும் உபயோகிக்கவும் அனுமதி உள்ளது. ஆனால் பலர் வீடுகளில் சட்டத்துக்கு புறம்பான வகையில் மதுபானங்களை அருந்தும் வழக்கத்தைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுபானம் அருந்தியதால் சுகவீனமடைந்தவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புனித ரமழான் மாதத்தையொட்டி பாகிஸ்தானிலுள்ள சட்டபூர்வமான மதுபான நிலையங்கள் மூடப்பட்டதால் பலரும் சட்டவிரோதமான மதுபானங்களை வாங்கி அருந்துவதில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் குப்பி மற்றும் தர்ரா ஆகிய இரு வகைகளாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மதுபான பாவனையாளர்கள் அவற்றை கலந்து அருந்துவதே மதுபானம் நச்சுத்தன்மை அடைவதற்கான காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !