பெற்றோர் அடித்து கண்டித்த காரணத்தால் 11 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞர் ஒருவர் தற்போது ஃபேஸ்புக் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
புனோவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அங்குஷ் டோமலே. 12 வயதாக இருந்த போது அதாவது 2002 ம் ஆண்டு அவரது தயார் நன்றாக படிக்கவில்லை என்று அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த அங்குஷ் வீட்டை விட்டு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் உள்ள குருத்துவாராவில் போய் தஞ்சமடைந்தார்.
அங்கு போய் தன்னுடைய பெயரை குர்பான் சிங் என்று மாற்றிக் கொண்டதோடு சீக்கியராக வாழத் தொடங்கிவிட்டார். 10 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதனிடையே தனது மகனைக் காணாத அங்குஷ் தாயார் ஹேமலதா மகனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அங்குஷ்சிற்கு ஒரு சகோதரன் இருக்கிறான் அவரது பெயர் சந்தோஷ். கடந்த இரண்டு வருடங்களாகவே காணாமல் போன தனது சகோதரனை தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனிடைய கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்குஷ் ஃபேஸ்புக் மூலம் தனது சகோதரனை அடையாளம் கண்டு கொண்டார். தன்னுடைய முகத்தில் இருந்த காயத்தை வைத்து தான் யார் என்பதை அடையாளம் கூறினார். இதனையடுத்து அவருடைய குரு லூதியானாவில் இருந்து புனே செல்வதற்கு ஏற்பாடு செய்தார். வீட்டிற்கு வந்த அங்குஷ் தனது உறவினர்கள், சொந்தங்களைக் கண்டு பெரும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். ஆனால் அவர் சீக்கியர் தோற்றத்தில் இருந்த காரணத்தினால் யாரலும் அவரை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து தன்னுடைய காயத்தை காண்பித்தார் சில நிகழ்வுகளை நினைவு படுத்தவே மகனைக் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டார் ஹேமலதா.
வீட்டை விட்டு ஓடிப்போன தனக்கு நல்வழி காட்டிய குருவிற்கு நன்றி தெரிவித்த அங்குஷ் தற்போது புனேவிலேயே தங்கிவிட்டார். காணாமல் போன மகன் ஃபேஸ்புக் மூலம் தன்னைத் தேடி வந்தது கண்டு மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளார் அந்தத் தாய்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !