இந்தியாவின் ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.
இக்குழந்தை பிறந்தப்போது, அதனை காப்பாற்ற முடியுமென மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24ம் திகதி அர்சி என்னும் 24 வயது இளம்பெண்ணுக்கு இரட்டை தலையுடன் கூடிய ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
உடலில் இரண்டு தலை, இரண்டு முதுகெலும்பு மற்றும் இரண்டு நரம்பு மண்டலங்கள் இருந்த இக்குழந்தைக்கு ஓரேயொரு இதயம், தோள்பட்டை இருந்தது. குழந்தை பிறந்ததில் இருந்தே சரியாக மூச்சு விடமுடியாமல் தவித்தது. எனவே, குழந்தைக்கு செயற்கை சுவாசம் வைத்து ஜே.கே.லோன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும், இக்குழந்தை எளிதாக மூச்ச விட முடியாமல் சிரமப்பட்ட அக்குழந்தை உயிரிழந்தது. பொதுவாக இது போன்று பிறக்கும் குழந்தை உயிர் வாழ்வது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அக்குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் அதிக முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !