ஒரு மனிதன் எப்படி நாயின் மூஞ்சினை பொருத்த முடியும். இன்று இருக்கின்ற அதி தொழில்நுட் மருத்துவ வளர்ச்சியால் இது சாத்தியப்படலாம். ஆனால் நாயின் தாடை நாக்கு பற்கள் இவற்றோடு ஒரு மனிதனின் வாயில் பொருத்தினால் எப்படி தொண்டையுடன் பொருந்த முடியும். நாடி நாளங்கள் இதோடு ஒத்துப்போகுமா?
‘பிளாஸ்டிக்’ என்றால் ‘செதுக்கி உருவாக்குவது’ to give shape என்றுதான் அர்த்தம். இது கிரேக்க வார்த்தை. பிளாஸ்டிக் சர்ஜரியில் அதைத்தான் செய்கிறார்கள். சுமார் மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி பிரபலம். கி.மு ஒன்பதாம் நூற்றாண்டில் சாரகா, சுஸ்ருதா என்ற இரண்டு பெரும் வைத்தியர்கள் மருத்துவம்பற்றி பெரும் புத்தகங்களை எழுதினார்கள். சாரகா எழுதியது எட்டு வால்யூம்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா!
சுஸ்ருதா பிளாஸ்டிக் சர்ஜரியில் கில்லாடி. குறிப்பாக, ரைனோபிளாஸ்டி என்கிற (மூக்கை உருவாக்குவது!) சர்ஜரியில் அவர் பிரமாதப்படுத்தினார். மூக்கு ‘ஷேப்’புக்கு இலையைக் கத்தரித்து, அதில் தொடைப் பகுதியில் இருந்து சதையை வெட்டிப் பொருத்திவைத்துச் செதுக்கி, மூக்கு இருந்த பகுதியில்வைத்துத் தைப்பது அவர் ஸ்பெஷாலிட்டி. அப்போது திருமணமான பிறகு கள்ளக் காதலில் ஈடுபட்டவர்களின் மூக்கு வெட்டப்பட்டது. அவர்களுக்கு எல்லாம் ‘மூக்கு’ தந்து அருளியவர் சுஸ்ருதாவே.
இதற்கிடையில் சிலர் மோப்பம் பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்களை பார்த்து நீ, நாயா பிறந்திருக்க வேண்டியவன், தப்பி மனிதனா பிறந்துட்ட என்று வேடிக்கையாக கூறுவதுண்டு. அதேமாதிரி, நகைச்சுவை துணுக்குகளில் கூட, “நான் அடுத்த ஜென்மத்திலையாவது நாயா பிறக்கணும், ஏன்னா என் மனைவி நாய்க்கு தான் பயப்பிடுறான்னு” சொல்வதுண்டு. என்ன தான் வேடிக்கையாக மனிதனை நாயோடு ஒப்பிட்டு பேசினாலும் சிலருக்கு நாயின் மீது அளவு கடந்த அன்பும்,பாசமும் இருக்கதான் செய்கிறது. அதன் வெளிப்பாடாக அவர்கள் நாய்களை தங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பார்கள். ஆனால் தற்போது பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டி அறுவை சிகிச்சை மூலம், தன் முகத்தையே நாய் வடிவில் மாற்றி கொண்டதாக வந்த ஒரு செய்தி‘வலை’களில் பரவுகிறது .
தென் அமெரிக்க நாடான பிரேசிலை சேர்ந்த பேர் சொல்ல விரும்பாத செல்வந்தர் ஒருவர் தன் வாழ்நாளில் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாராம். இந்நிலையில் தன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொள்ள விரும்பிய அவர் ஏராளமான பணத்தை செலவு செய்து நாயின் முக வடிவை பெற்றுள்ளதாகவும்.இதற்காக இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு பொருத்தியுள்ளார்களாம் மருத்துவர்கள் என்றும் நியூஸ் பரவியது
மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் அசல் நாயின் முக உருவை பெற்றுள்ள அவர் இதனால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உலகிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாயின் உருவத்தை பெற்ற முதல் மனிதர் என்பதால் பொதுமக்கள் இவரை “டாக் மேன்’ என செல்லமாக அழைக்கின்றனர் என்று தகவல் வெளியான நிலையில். இப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை. பிரேசியலைச் சேர்ந்த வெட்னரி சர்ஜன் ஒருவர் கிளப்பிய புரளி இது என்றும் செய்தி வருகிறது.அதிலும் இது 2004- ல் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !