ஹடுவன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை இளம் பெண்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹடுவன, வளஸ்முள்ள பிரதான வீதியின் பாலத்திற்கு அருகில் இவ் விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் வண்டியில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்மார் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் 53 வயதான தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
19 மற்றும் 13 வயதாக மகள்மார் இருவரும் மாத்தறை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !