ஆங்கில வார்த்தைகளை அதிகமாக உபயோகிப்பதாகக் கூறி தொலைக்காட்சி அலைவரிசை மீது ஜப்பானில் நபரொருவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
ஹொஜி டகஹாஷி என்ற 71 வயதான முதியவரே வழக்கைத் தொடுத்தவராவார்.
அவர் 1.41 மில்லியன் யென்களை குறித்த அலைவரிசையிடம் நட்ட ஈடாகக் கோரியுள்ளார். எ.எச்.கே. என்ற அலைவரிசையானது ஆங்கில வார்த்தைகளில் பெரிதும் தங்கியிருப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாகவே அதன் மீது வழக்குத் தொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஜப்பானது அதிகமாக அமெரிக்க மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொஜி கருதுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இவற்றினுடாக ஜப்பானியர்கள் நாளாந்தம் அதிகப்படியான ஆங்கிலச் சொற்களை உபயோகிப்பதாக ஹொஜி டகஹாஷி கருதுவதாகவும் அவரது வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !