இப்போது கார்களில் இன்போடெயின்மென்ட் சாதனம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பல வசதிகளை ஒருங்கிணைத்து தரும் இன்போடெயின்மென்ட் சாதனத்தில் மேலும் பல வசதிகளை பெறும் வகையில் புதிய ஐ.ஓ.எஸ்-7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் "iOS in the car" என்ற புதிய அப்ளிகேஷனை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.
எல்லாமும் கிடைக்கும் இந்த புதிய சாப்ட்வேரை காரில் இருக்கும் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்துக் கொண்டால், மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டத்தை எளிதாக வாய்மொழி உத்தரவு மூலம் கட்டுப்படுத்த முடியும். மேலும், போனிலிருந்து அழைப்பதற்கும், துண்டிப்பதற்கும் எளிதாக அமையும். இதுதவிர, ஏராளமான வசதிகளை இந்த புதிய சாப்ட்வேர் மூலம் பெற முடியும்.
என்ன வேணும்:
ஐ.ஓ.எஸ் இன் தி கார் சாப்ட்வேர் மூலமாக பயணத்திற்கான தோராய நேர மதிப்பீடு, போக்குவரத்து நிலவரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
இதுவும் புதுசு:
ஆப்பிளின் Siri Eyes Free அப்ளிகேஷன் மூலம் போன் அழைப்புகளை செய்வதோடு, மிஸ்டு கால் நம்பருக்கு போன் செய்ய முடியும்.
ஐடியூன் ஐடியூன்:
உள்ளூர் ரேடியோ, ஆடியோ புத்தகங்கள் மற்றும் அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்வது உள்ளிட்ட அனைத்தையும் வாய்மொழி உத்தரவு மூலம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி செய்யலாம்.
எஸ்எம்எஸ் அனுப்பலாம்:
சிரி அப்ளிகேஷன் மூலம் குறுந்தகவலையும் வாய்மொழி உத்தரவின் மூலம் அனுப்ப முடியும்.
அடுத்த ஆண்டு முதல்:
அடுத்த ஆண்டு முதல் ஹோண்டா, பென்ஸ், நிசான், ஃபெராரி, செவர்லே, இன்ஃபினிட்டி, கியா, ஹூண்டாய், வால்வோ, அக்குரா ஆகிய கார் நிறுவனங்கள் இந்த புதிய சாப்ட்வேரை சப்போர்ட் செய்யும் விதத்தில் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை பயன்படுத்த துவங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !