Headlines News :
Home » » மருத்துவ உலகன் நவீன கருத்தடை சாதனம்: உடலில் ஓட்டிக்கொண்டால் போதும்!

மருத்துவ உலகன் நவீன கருத்தடை சாதனம்: உடலில் ஓட்டிக்கொண்டால் போதும்!

Written By TamilDiscovery on Saturday, June 29, 2013 | 11:01 AM

இன்றைய நவீன உலகில் கர்ப்பத்தை தடுக்க பல வழிகள் வந்துவிட்டன. அதிலும், உலகமெங்கும் ஆண்கள் பயன்படுத்தக்கூடிய காண்டம் (Condoms) வகைகள் நிறைய இருக்கிறது. அதே சமயம் பெண்களுக்கான காண்டமும் இருக்கிறது.

ஆனால் அவசர கால கருத்தடை மாத்திரைகள் (Emergency Contraceptive Pills), கருப்பைக்குள் வைக்கிற கருத்தடை சாதனங்களான லூப், காப்பர்-டி மற்றும் கருப்பையில் வைக்கக் கூடிய "லெவொநர்ஜெஸ்ட்ரல்" (Levonorgestrel) சாதனம். என தற்போது நிறைய கருத்தடை சாதனங்கள் இருக்கின்றன. இதில் லூப்-ஐ மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.மேலும் கருப்பையில் வைக்கக்கூடிய லெவொநர்ஜெஸ்ட்ரல் சாதனமும் காப்பர்-டி போன்ற அமைப்போடுதான் இருக்கும். ஆனால், இதில் காப்பருக்கு பதிலாக கருத்தடை மாத்திரையை வைத்திருப்பார்கள்.

காப்பர் சிலருக்கு அலர்ஜி ஆகும். இதைப் பொருத்திக் கொள்வதால் மாதவிலக்கின்போது மட்டும் அதிக ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதையடுத்து காப்பர்-டி பொருத்திக் கொண்டவர்கள் மூன்று வருடங்களுக்குப் பிறகும், லெவொநர்ஜெஸ்ட்ரல் மாத்திரை பொருத்திக் கொண்டவர்கள் ஐந்து வருடங்களுக்குப் பிறகும் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று மாற்று சாதனத்தை பொருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்த சாதனத்தை கருப்பைக்குள் இருந்து நீக்கி விட வேண்டும். இப்படிச் செய்யாமல் விட்டால், நீண்ட நாட்கள் சாதனம் ஒரே இடத்தில் இருந்து இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்புண்டு. அதோடு, சாதனம் தன் சக்தியை இழந்து விடுவதால் மீண்டும் கருத்தரிக்கவும் வாய்ப்புண்டு. இப்படி கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய பல்வேறு பிரச்னைகளும் அதை தீர்க்கும் முயற்சிகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன. இதில் ஒன்றை விட ஒன்று எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம்.

அந்த வகையில் தற்போதைய இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் இந்த பேட்ஜ். (Contraceptive Patch) ‘ஹார்மோன் பேட்ஜ்' என அழைக்கப்படுகின்ற இவற்றை சமீபமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மருத்துவ உலகம். இந்த பேட்ஜ்களை குறிப்பிட்ட நாட்களில் பெண்ணின் தோள் பட்டையிலோ அல்லது உள்ளங்கை, காலிலோ அழுத்திப் பொருத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜஸ்டிரான் ஆகியவை பெண்மைக்கான ஹார்மோன்கள். இவற்றை அளவுக்கு அதிகமாக பெண்ணின் உடலில் செலுத்தும்போது, அது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டி, கர்ப்பத்தைத் தடுக்கிறது.

இந்த ஹார்மோன் களைத்தான் பெரும்பாலான கருத்தடை மாத்திரைகள் தருகின்றன. அதே ஹார்மோன்களை சருமத்தின் வழியே மெல்ல மெல்லச் செலுத்துவதுதான் இந்த பேட்ஜ்களின் வேலை. இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, எந்த அளவுக்கு உறுதியாக கர்ப்பத்தைத் தடுக்கும் என்பதெல்லாம் தெரியாததால் இன்னும் டாக்டர்கள் பெருமளவில் பரிந்துரைக்கத் தொடங்கவில்லை.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template