அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆப்பிரிக்கவில் உள்ள மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் செனகல் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தென்னாபிரிக்கா சென்றார். கடந்த 8-ம் திகதி முதல் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நெல்சன் மண்டேலாவின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒபாமா, மருத்துவமனைக்குச் சென்று மண்டேலாவை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒபாமா மண்டேலாவின் குடும்பத்தினரை மட்டுமே சந்திப்பார், மருத்துவமனைக்கு சென்று மண்டேலாவை சந்திக்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்க மக்களின் சம உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய நெல்சன் மண்டேலா(94), 27 ஆண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த ராபென் தீவு சிறையை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று பார்வையிடவுள்ளார்.
ஐ.நா. சபை உலக புகழ்பெற்ற நினைவு சின்னமாக அறிவித்துள்ள இந்த சிறையில் தனது வாழ்நாளில் 27 ஆண்டுகளை அரசியல் கைதியாக நெல்சன் மண்டேலா கழித்துள்ளார்.
மக்களின் விடுதலைக்காக போராடிய மண்டேலாவை கைது செய்த அரசு அவரை சங்கிலியால் கட்டி ராபென் தீவில் உள்ள இந்த சிறைக்கு ஓர் மரக்கலனில் எற்றி அனுப்பி வைத்தது.
கைதி எண் 466/64 என்ற அடையாளத்துடன் இந்த தண்டனையை ஏற்றுக் கொண்ட மண்டேலா, மிக குறுகிய சிறை கொட்டிலில் கட்டாந்தரையில் படுத்து உறங்கி, பகல் முழுவதும் பாறைகளை உடைத்து தண்டனை காலத்தை நிறைவு செய்தார்.
´எனது பொதுவாழ்வுக்கு தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாதான் முன்னோடி´ என்று பலமுறை வெளிப்படையாக கூறிவரும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கடந்த 2006ம் ஆண்டின் போது ஓர் எம்.பி.யாக மட்டும் இருந்த காலகட்டத்தில் தென்னாபிரிக்காவுக்கு வந்து நெல்சன் மண்டேலாவை சந்தித்தார்.
அப்போது, ராபென் தீவு சிறையையும் அவர் பார்வையிட்டார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு தற்போது தென்னாபிரிக்கா வந்துள்ள ஒபாமா, மீண்டும் இரண்டாவது முறையாக நெல்சன் மண்டேலா 27 ஆண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த சிறையை இன்று பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !