மாஸ்கோ: விண்வெளிக்கு முதற்கட்டமாக அனுப்பப்பட்ட எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகள் ஆகியவை உயிருடன் பத்திரமாக திரும்பி வந்துள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2030-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ள ரஷியா, அதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முதல்கட்டமாக விண்வெளிக்கு உயிரினங்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.
முதல் கட்ட முயற்சியாக 45 எலிகள், 15 பல்லிகள், நத்தைகள் மற்றும் தாவரங்களை வைத்து கடந்த ஏப்ரலில் பியான்-எம். என்ற விண்கலத்தை ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியது.
அந்த விண்கலம் பூமியில் இருந்து சுமார் 575 கி.மீட்டர் தூரத்தில் ஒரு மாத காலமாக விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆய்வு முடிந்த நிலையில் அந்த விண்கலம் ஓரன்பர்க் மாகாணத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.
அப்போது, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகளில் பெரும்பாலானவை உயிருடன் இருந்தது தெரிய வந்துள்ளது.
பொதுவாக விண்வெளிக்கு சென்றதும் உடல் எடை குறையும் , அந்நிலையில் உடல் உறுப்புகள் பணிபுரியும் தன்மை குறித்து ஆராய்வதற்காக இந்த சோதனை முயற்சி செய்யப்பட்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !