இஸ்ரேலின் மொஷாட் மற்றும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. புலனாய்வு அமைப்புகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேருக்கு ஈரானில் ஞாயிற்றுக் கிழமை தூக்குத் தண்டனை (மரணதண்டனை) நிறைவேற்றப் பட்டதாக அங்கிருந்து வரும்
செய்திகள் தெரிவிக்கின்றன.
பணத்திற்காக ஈரானிய இரகசியங்களை இஸ்ரேலின் மொஷாட் அமைப்புக்கு வழங்கியதாகக் கூறி மொஹமட் ஹேதாரி என்பவரும் அமெரிக்க சி.ஐ.ஏ. விற்கு தகவல்களை வழங்கியதாக, ஈரானின் பாதுகாப்புக் விவகாரங்கள் குறித்து இஸ்ரேலின் மொஸ்ஸாட்
உளவு நிறுவனத்துக்கு வழங்கினார் எனவும் அஹ்மடி அமெரிக்காவின் சிஐஏ இற்காக
பணி புரிந்தார் என்றும் குற்றஞ் சாட்டப் பட்டுள்ளது. இதேவேளை இவர்களுக்கு நிறைவேற்றப் பட்ட தூக்குத் தண்டனை குறித்து
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் கருத்துக் கூற மறுத்து விட்டனர்.
இத்தகவலை ஈரானின் தேசிய வானொலிச் சேவையே வெளியிட்டுள்ளது.
எனினும் இவர்கள் எப்போது கைதுசெய்யப்பட்டனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தமது அணுச்செறிவாக்கல் மற்றும் இராணுவ இரகசியங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பல வருடங்களாக உளவுபார்க்க முயன்று வருவதாக ஈரான் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்
கடந்த 12 மாதங்களில் ஈரான் 488 பேரைத் தூக்கிலிட்டுருப்பதாக அதிர்ச்சித்
தகவலை ஒரு மனிதாபிமான அமைப்பு வெளியிட்டுள்ளது இதில் 12% வீதமான
தண்டனைகளில் அந்நாட்டுப் பொதுமக்கள் உள்ளடங்குவர். இதைவிட சிஐஏ இற்கு உளவு
பார்த்த் முன்னால் அமெரிக்க கப்பற் படை வீரர் ஒருவரையும் ஈரான் தனது
கஸ்டடியில் வைத்துள்ளது.
மேலும் ஈரான் தனது நாட்டு அணு
விஞ்ஞானிகளைக் குறி வைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் புலனாய்வு செய்து
கொன்று வருவதாக ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !