Headlines News :
Home » » பாதாமின் 15 நன்மைகள், மற்றும் அழகான சருமத்திற்க்கு.

பாதாமின் 15 நன்மைகள், மற்றும் அழகான சருமத்திற்க்கு.

Written By TamilDiscovery on Monday, May 20, 2013 | 7:10 AM

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது.

அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது.

இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை. இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

கொலஸ்ட்ரால்:-
 பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.

இரத்த அழுத்தம்:-
 பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

புற்றுநோய்:-
 நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.

சீரான இரத்த ஓட்டம்:-
 மக்னீசியம், பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.

வலுவான எலும்புகள்:-
 மற்றும் பற்கள் பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், மூட்டு வலியை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.

எடை குறைய:-
 பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.

நீரிழிவு:-
 பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பித்தக்கற்கள்:-
 பாதாமை தொடர்ந்து சாப்பிட்டால், 25% பித்தக்கற்கள் உருவாவது குறைந்துவிடும். ஆனால் ஏற்கனவே சிறுநீரகம் அல்லது பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்கள், இந்த நட்ஸை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு இதில் உள்ள ஆக்சலேட் பண்புகள் தான் காரணம்.

எனர்ஜி:-
 பாதாமில் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் கனிமங்களான மாங்கனீசு, காப்பர் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளது.

ஆரோக்கியமான மூளை:-
 ஆய்வு ஒன்றில், பாதாமில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும், தினமும் காலையில் நீரில் ஊற வைத்த 5 பாதாம் சாப்பிட்டு வந்தால், மூளையின் சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இரத்த சோகை:-
 காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.

மலச்சிக்கல்:-
 பாதாமில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், அது செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடும்.

அழகான சருமம்:-
 பாதாமில் நல்ல அளவில் மாய்ஸ்சுரைசிங் தன்மை இருப்பதால், அது வறட்சி, முப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

முடி பிரச்சனைகள்:-
 முடிகளில் பிரச்சனை உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை தடவி வந்தால், சரிசெய்துவிடலாம். அதிலும் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, மெல்லிய முடி போன்றவற்றை குணமாக்க உதவியாக இருக்கும்.
சருமத்தை அழகாக வைப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் சில தான் சருமத்திற்கு ஃபேஸ் பேக் மற்றும் ஃபேஸ் மாஸ்க். அத்தகைய ஃபேஸ் மாஸ்க் மற்றும் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று கெமிக்கல் கலந்த பொருட்களை போடுவதை விட, வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்து போட்டால், சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கும். மேலும் ஃபேஸ் பேக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் பாதாம் ஃபேஸ் பேக்.

 பாதாம் சருமத்தில் ஏற்படும் வறட்சி, அதிக எண்ணெய் பசை மற்றும் சரும சுருக்கம் போன்றவற்றை நீக்க பெரிதும் உதவுகின்றன. முக்கியமாக சருமத்திற்கு ஃபேஸ் பேக் போடும் முன், கிளின்சரை வைத்து முகத்தை கழுவ வேண்டும். அதிலும் எண்ணெய் பசை சருமத்திற்கு ஜெல் கிளின்சரும், வறட்சியான சருமத்திற்கு பால் அல்லது லோசனும் சிறந்தது. கிளின்சரை சருமத்திற்கு பயன்படுத்தியதும், சருமத்தின் துளைகள் சற்று விரிவடைய ஒரு சிறிய ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் ஃபேஸ் பேக் போடுவதன் பலன் நன்கு தெரியும். மேலும் எந்த சருமத்திற்கு பாதாமை வைத்து எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போமா!!!



அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பாதாம் ஃபேஸ் பேக்:-

தேவையான பொருட்கள்:

பாதாம்- 5

பால் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்

பாதாம் எண்ணெய் - 4 துளிகள்

பயன்படுத்தும் முறை:

 பாதாம் இரவில் படுக்கும் முன் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்து, அதன் தோலை நீக்கி, பாலோடு சேர்த்து அரைத்து, மற்ற பொருட்களையும் அதனுடன் கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மெதுவாக மசாஜ் போல் செய்து, பிறகு கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், சருமம் நன்கு மென்மையாக, சுத்தமாக, அழகோடு பளிச்சென்று மின்னும்.

 வறண்ட சருமத்திற்கு:-

 இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் தோலை நீக்கி அரைத்து, ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின் காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் சுத்தமான துணி அல்லது காட்டனை வைத்து துடைக்க வேண்டும்.

சுருக்கமுள்ள சருமத்திற்கு:-

பாதாமை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பேஸ்ட் செய்த பின், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அந்த கலவையை முகத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

 அதிலும் பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இது உடலுக்கு, சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் சிறந்தது. ஆகவே பாதாமை தினமும் சாப்பிடுவதோடு, அதன் எண்ணெயை கூந்தலுக்கு தடவி, சருமத்திற்கு அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க் போட்டு அழகாக ஜொலியுங்கள்.








Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template