Headlines News :
Home » » வாலிபர் கொலை: பின்னணியில் நடிகை சோனா!

வாலிபர் கொலை: பின்னணியில் நடிகை சோனா!

Written By TamilDiscovery on Friday, October 11, 2013 | 9:27 PM

சென்னையை அடுத்த கொருக்குப்பேட்டையில் வாலிபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது கொலைக்கான காரணம் பற்றிய பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.

சென்னை குத்தம்பாக்கம் வெள்ளவேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனீர் அகமது இவர் மகன் ஜாகீர் உசேன் (வயது 26).

திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொருக்குப் பேட்டை ராஜா நகரில் குடியேறினார்.

அப்போது சண்டைக் கோழிகள் வளர்க்கும் தொழில் செய்து வந்தார். கொருக்குப் பேட்டையில் வசித்த போது அங்கு வசித்த வந்த துணை நடிகை சோனா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். பிறகு துணை நடிகை சோனா கன்னட நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்.

இந்த நிலையில், ஜாகீர் உசேனும் வெள்ளவேடுவில் குடியேறிவிட்டார். ஆனால் அதன் பிறகும் துணை நடிகை சோனாவுக்கும் ஜாகீர் உசேனுக்கும் தொடர்பு இருந்து வந்தது.

ஜாகீர் உசேன் நடிகை சோனாவை அழைத்து அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இது பற்றி நடிகை சோனா அபுதாபியில் உள்ள தன் தங்கையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் உடனே சென்னையில் உள்ள காதலன் ஜெயராமன் (27) என்பவரிடம் இதனைக் கூறியுள்ளார்.

ஜெயராமனுக்கும் ஜாகீர் உசேனுக்கும் ஏற்கனவே பரிச்சயம் என்பதால் ஜாகீர் உசேனை கொருக்குப் பேட்டைக்கு அழைத்துள்ளார்.

கொருக்குப் பேட்டைக்கு ஜாகீர் வந்தவுடன், ஜெயராமன் தனது நண்பர்களுடன் சேர்த்து இவரையும் மதுபானக்கடைக்கு அழைத்துச் சென்றார்.

அதன் பிறகு ஜெயராமனும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஜாகீர் உசேனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர். ஜாகீர் உசேன் படுகாயமடைந்து பிறகு உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆர்.கே. நகர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். பிறகு நள்ளிரவில் ரோந்து சென்ற பொலிசார் ஜெயராமன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

தற்போது நடிகை சோனாவுக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template