கள்ளக் காதலிக்காக மனைவியின் தங்க நகைகளை திருடி அவளுடன் பொலிஸில் முறையிட சென்ற கணவன் விசாரணையின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
யாழ். கோண்டாவில் பகுதியிலுள்ள குடும்பம் ஒன்று தங்களது தங்க ஆபரணங்கள் திருட்டு போய் விட்டதாக முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் கணவன் மனைவியுமாக வந்து முறையிட வந்த இடத்தில் இவர்களது முறைப்பாட்டில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக பொலிஸார் துருவித்துருவி விசாரணைகளை மேற்கொண்ட போது மனைவியின் தங்க ஆபரணங்களை கணவனே திருடியது தெரிய வந்துள்ளது.
திருடிய தங்க ஆபரணங்கள் நண்பனிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் தனது தொலைபேசி காதலிக்கு கொடுப்பதற்காக மனைவியின் தங்க ஆபரணங்களைத் திருடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !