Headlines News :
Home » » 30வருடத்தில் 106 முறை திருமணம்: புதிய உலக சாதனை படைத்துள்ள அமெரிக்க ஜோடி.

30வருடத்தில் 106 முறை திருமணம்: புதிய உலக சாதனை படைத்துள்ள அமெரிக்க ஜோடி.

Written By TamilDiscovery on Tuesday, July 23, 2013 | 10:41 AM

அமெரிக்காவை சேர்ந்த ஜோடி இதுவரையிலும் 106 முறை திருமணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னிஸியை சேர்ந்தவர்கள் டேவிட் பிளேர், லாரன் பிளேர் தம்பதி.

கடந்த 1982ம் ஆண்டு டேவிட், லாரனை முதன் முறையாக சந்தித்துள்ளார். அப்போது லாரனிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு முதலில் மறுத்து விட்டாராம்.பின்னர் 3 மாதங்கள் கழித்து சம்மதம் தெரிவிக்கவே, கடந்த 1984ம் ஆண்டு முதன் முறையாக திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அந்த தம்பதி லண்டன், நியூயார்க், ஸ்காட்லாந்து, லாஸ் வேகாஸ், கிரேஸ்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதுவரை 106 முறை திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் காதலர் தினம், புத்தாண்டு நள்ளிரவு, கிறிஸ்துமஸ் தினம், பிப்ரவரி 29ம் திகதி என்று பல்வேறு நாட்களில் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2001ம் ஆண்டு காதலர் தினத்தன்று அவர்கள் நியூயார்க்கில் உள்ள செரன்டிபிட்டி 3 ரெஸ்டாரன்ட்டில் திருமணம் செய்தபோது அதிக தடவை திருமணம் செய்து கொண்ட தம்பதி என்ற புதிய உலக சாதனை படைத்தனர்.

திருமணமாகி 30 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதி, வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மீண்டும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.












Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template