Headlines News :
Home » » யாழில் வணக்கஸ்தலம் மீது கைக்குண்டுத்தாக்குதல்: பின்னணி என்ன?

யாழில் வணக்கஸ்தலம் மீது கைக்குண்டுத்தாக்குதல்: பின்னணி என்ன?

Written By TamilDiscovery on Saturday, August 10, 2013 | 9:54 PM

யாழ். நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள பெரும்பான்மையின மக்களின் வழிபாட்டு மண்டபம் மீது இனந்தெரியாதவர்கள் நேற்று (10) இரவு 8 மணியளவில் கைக்குண்டு வீசியுள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நாவற்குழி பிரதேசத்தில் உள்ள அரச காணியில் பெரும்பான்மையின குடும்பங்கள் குடியேறியுள்ளனர்.

அங்கு குடியேறிய மக்கள் தாம் வழிபாடு நடாத்துவதற்கு அப் பிரதேசத்தில் ஒரு வழிபாட்டு மண்டபத்தினை அமைத்திருந்தனர்.

அவ் வழிபாட்டு மண்டபத்தின் மீதே இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அவர்களால் வீசப்பட்ட கைக்குண்டு மண்டபத்தின் மீது விழுந்து வெடிக்காமல் அருகில் விழுந்து வெடித்ததனால் மண்டபத்திற்கு சேதங்கள் ஏற்படவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template