Headlines News :
Home » » மரணத்தின் விளிம்பில் உள்ள குழந்தை: தந்தைக்கு திருமணத் தோழன்!

மரணத்தின் விளிம்பில் உள்ள குழந்தை: தந்தைக்கு திருமணத் தோழன்!

Written By TamilDiscovery on Monday, August 5, 2013 | 8:38 AM

அமெரிக்காவில் குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில வாரங்களில் உயிர் இழக்கப் போகும் 2 வயது ஆண் குழந்தை தனது பெற்றோரின் திருமணத்தில் மணமகனின் தோழனாக கலந்துகொண்டமை அனைவரது நெஞ்சையும் உருக்கும் சம்பவமாக அமைந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவது:

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்  ஷோன் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன் ஸ்விடோர்ஸ்கீ. காதலர்களான அவர்களுக்கு லோகன் ஸ்டீவன்சன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

லோகன் குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அதற்காக அவனுக்கு பல்வேறு  சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் லோகனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இன்னும் சில வாரங்கள் தான் உயிரோடு இருக்கும் என்று தெரிவித்துவிட்டனர்.

முன்னதாக ஷானும், கிறிஸ்டீனும் வரும் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் லோகன் இறக்கும் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் குழந்தை உயிருடன் இருக்கையிலேயே திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் பிட்ஸ்பர்க்கில் திருமணம் செய்து கொண்டனர். 2 வயது லோகன் தனது தந்தைக்கே மணமகன் தோழனாக பங்கேற்றிருந்தமை பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்திருந்தது.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template