இது தொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது,
எல்லோருக்கும் வணக்கம்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவா படம் ரிலீஸ் ஆகலை. கரெக்டா ரிலீஸுக்கு 2 நாளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்களை விடுத்தனர்.
அதனால யோசிச்சு வெளியிடத்தான் இந்த தாமதம். இதனால ஹோல் யூனிட்டுமே ஆடிப்போய்த்தான் இருக்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம். ஓரிரு நாட்களில் அவங்க எங்களை மீட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். தமிழக முதல்வர் எவ்ளோ நல்ல விஷயங்கள் செய்துகிட்டு இருக்காங்க. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறாங்க. தமிழக மக்களுக்கு இவ்ளோ நல்லது செய்யுறவங்க தலைவா பட விவகாரத்திலும் தலையிட்டு ரிலீஸுக்கு உதவ வேண்டும். சென்னை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் தலைவா படத்தின் டிவிடிக்கள் பிடித்திருக்கிறீர்கள்.
உங்களுக்கும் பொலிசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இன்னிக்கு ரிலீஸ், நாளைக்கு ரீலீஸ்னு காத்திகிட்டு இருக்கிறோம். நிச்சயமாக ஓரிரு நாட்களில் தலைவா படம் வெளியாகிவிடும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.
தயாரிப்பாளர் வேண்டுகோள்.
தலைவா திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் அதன் தயாரிப்பாளர் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.சந்திரபிரகாஷ் ஜெயின் கூறியுள்ள அறிக்கையில், அம்மா, திரைப்பட தயாரிப்பாளராகிய நான் இதற்கு முன்பு இரண்டு படங்களில் தயாரித்து நல்லமுறையில் வெளியிட்டுள்ளேன்.
கடந்த 9.8.2013 அன்று தலைவா படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தேன்.
ஆனால் இப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளுக்கு மிரட்டல் வந்ததால், அன்று வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் மட்டும் வெளிவராத இப்படம் நாளை(16.8.2013) கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.
‘அம்மா’ நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ்த்திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.
கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த ‘தலைவா’ திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.
கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.
இந்த ’தலைவா’ திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9–ந்தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.
ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.
இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும் திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளி வந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது. இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் எனக்கு மிகவும் பொருள் நஷ்டம் ஏற்பட்டு, எல்லோருக்கும் மிகுந்த நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்படும்.
இதனால் இந்தப்படத்தில் சமந்தப்பட்ட அனைவரும், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என எல்லோரும் பாதிக்கப்படுவார்கள். நானும், எனது குடும்பமும் நடுரோட்டுக்கு வரும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் பல குடும்பங்களை காப்பாற்றும் நீங்கள், தயயுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சந்திரபிரகாஷ் ஜெயின் கண்ணீர் மல்க கூறினார்.
ஆகவே முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மனமிரங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !