மாமனாரினால் மருமகள் தீயிட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம் பெற்றது.
கட்டுநாயக்க , குரணை, நத்தா மாவத்தையை சேர்ந்த செல்லப்புலிகே லக் சிகா சுதர்ஸனி ரோஸா என்ற 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே கணவரின் தந்தையினால் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
27 சனிக்கிழமை அன்று அதிகாலை 5.15 மணியளவில் குறித்த பெண் சந்தேக நபரான கணவரின் தந்தையினால் தீயிட்ட சம்பவத்தை அடுத்து எரிகாயங்களுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிற்பகல் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மரணமடைந்த பெண்ணின் மாமனாரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, மருமகளுக்கு தானே தீ மூட்டியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார். இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ் வீரதுங்க விஜயம் செய்து விசாரண நடத்தினார்.
இச்சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் சாட்சிகளை மன்றில் ஆஜர் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பிராந்திய உப பொலிஸ் அத்தியட்சகர் பி. ஏ.டி. விஜயரத்னவின் ஆலோசனையின் போரில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபருக்கு தூக்குத் தண்டணை வழங்குமாறும் ஏனைய நபர்களை கைதுசெய்யமாறும் வலியுறுத்தி கட்டுநாயக்க பிரதேசத்தில் முற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள் நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதியில் டயர்களுக்கு தீயிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்டவரின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள நிலையில் முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !