கடந்த சில நாட்களுக்கு முன் லண்டன் வீதிகளில் சீறிச் சென்ற லம்போர்கினி கார் ஒன்றை அம்மாநகர போலீசார் மடக்கி ஓட்டி வந்தவரை விசாரித்தனர்.
அப்போது, லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் காரை அவர் ஓட்டியது தெரிய வந்தது. இதுதொடர்பாக லண்டன் போலீசார் காரை ஓட்டி வந்தவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், காரை ஓட்டி வந்தவர் பெயர் நசீர் அல்தானி(24) என்பதும், கத்தார் நாட்டு அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. லண்டனுக்கு சுற்றுலாவுக்கு வந்த அவர் தனது காரையும் உடன் எடுத்து வந்துள்ளார்.
ஆனால், லைசென்ஸ் மற்றும் இங்கிலாந்து சாலைகளில் ஓட்டுவதற்கான இன்ஸ்யூரன்ஸ் ஆகியவை அவரிடம் இல்லை. இதையடுத்து, அவர் ஓட்டி வந்த அந்த லம்போர்கினி சூப்பர் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இங்கிலாந்து போக்குவரத்து விதிகளின்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் சாலையில் செலுத்தப்படும் கார் கிரஷர் எந்திரத்தில் வைத்து நசுக்கப்படும்.
அதே நிலை இந்த காருக்கும் ஏற்படலாம் என அந்நாட்டு மீடியாக்கள் தெரிவித்துள்ளன. லண்டன் போலீசாரிடம் சிக்கி சின்னாபின்னாமாகப் போகும் அந்த காரை ஸ்லைடரில் காணலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !