களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவல பிரதேச வீதியில் நபர் ஒருவர் வெட்டி, குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான நபர் ஒருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேவேளை கொலைச் சந்தேகநபர்கள் தொடர்பிலும் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. நேற்று (08) இரவு 10 மணியளவில் இக் கொலை சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !