கட்டடத்தொகுதி ஒன்றின் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரை பொதுவெளியில் வைத்து தாக்கியதாகக் கூறப்படும் பியகம பிரதேச சபை உறுப்பினர் உட்பட்ட குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சப்புகஸ்கந்த, சமுர்த்தி மாவத்தையில் உள்ள கட்டட நிர்மாணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு நேற்று சென்ற பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் கட்டட நிர்மாணப்பணிக்கான அனுமதிப் பத்திரத்தை கோரியுள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்த பணியாளர் ஒருவரை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பொதுவெளியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் இன்று மஹரகம நீதிமன்றில் ஆர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !