புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை கனகா இன்று பிற்பகல் காலமானதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் அது மறுக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கனகா குறித்த செய்தி வெளியானதும், அவரது சித்தப்பா ராம ஈஸ்வர லால் அதனை மறுத்தார். அதே சமயம் சென்னை ராஜா அண்ணமலைபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குள் கனகா கதவை உள்பக்கமாக பூட்டியபடி இருந்துகொண்டிருப்பதாகவும், எவ்வளவோ கூப்பிட்டும் வெளியே வர மறுப்பதாகவும் அவர் ஊடகங்களை தொடர்பு கொண்டு கூறினார்.
இதுகுறித்த தகவலால் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும்
புகைப்படக்காரர்கள் கனகாவின் வீடு முன்னர் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து
கனகா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் நலமாக உள்ளதாக கூறிய அவர்,
தமது உடல் நலம் பற்றி வெளியான செய்தி குறித்து வேதனை தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்கவே தாம் அங்கு சென்றதாகவும்,
தமக்கு புற்று நோய் எதுவுமில்லை என்றும் அவர் கூறினார்.
எனக்குப் புற்றுநோய் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன், எந்தப் பிரச்சினையும் இல்லை, என்று நடிகை கனகா நேரில் தெரிவித்தார்.
நடிகை கனகா பற்றி கடந்த சில தினங்களாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆதரவற்றோருக்கான கேரளா மருத்துவமனையில் உருக்குலைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி பரவியது. இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக இன்று சில செய்தி ஏஜென்சிகள், ஆங்கிலப் பத்திரிகைகளின் இணையதளங்கள், தொலைக்காட்சிகள் என அனைத்திலும் செய்தி வெளியாகி பரபரப்பேற்படுத்தியது.
இப்படி செய்தி வெளியான சில நிமிடங்களில் கனகா நன்றாக இருப்பதாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டனர். சென்னை காளியப்பா மருத்துவமனையில் கனகா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுவும் தவறான செய்தி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கனகா பிரஸ் மீட் தகவல் கிடைத்தது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் கனகா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கண்ணாடி அணிந்திருந்த கனகா, முன்பு ஆவி அமுதா வழக்கில் நீதிமன்றத்தில் பார்த்ததை விட தெளிவாகவும் ஆரோக்கியத்துடனும் காணபபட்டார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "என்னைப் பற்றி யாரோ தவறாக சொன்ன தகவல்களை வைத்து இப்படி செய்தி வெளியானது வேதனையைத் தருகிறது. யாரோ சொன்னதை வைத்து ஏன் செய்தி போடறீங்க.. நான் ஆலப்புழா போனது ப்ரெண்டைப் பார்க்கக்கூட இருக்கலாம்ல. நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு கேன்சரெல்லாம் கிடையாது. எங்கும் சிகிச்சையும் பெறவில்லை!," என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !