சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஜேக் என்ற அவுஸ்திரேலிய நாய் ஒன்று அனைத்துப் பொருட்களையும் தலையில் சுமந்து வந்து எஜமானரிடம் தருகிறதாம்.
இதன் தலையில் பிஸ்கட், புத்தகங்கள், எலெக்ட்ரிக் பல்பு, வாட்ச், சமையல் பாத்திரம் என எதை வைத்தாலும் அதை கீழே விழுந்து விடாத படி சுமந்து நடப்பது தான் இதன் சிறப்பு.
மேலும் நடக்கும் போது தலையில் உள்ள பொருள் ஆடுவது இயல்பு தானே, ஆனால் அப்படி ஆடும் பொருட்களை கீழே விழுந்து விடாமல் சாமர்த்தியமாக அடி மேல் அடி வைத்து நடக்குமாம் இந்த ஜேக். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு டம்ளாரில் தண்ணீர் வைத்து ஜேக்கின் தலையில் வைத்தால், தண்ணீர் ஒரு சொட்டு கூட சிந்தாமல் நடப்பதில் சாமர்த்தியசாலியான இவருக்கு முட்டையெல்லாம் தண்ணீர் பட்ட பாடாம்.
இந்த ஜேக்கிற்கு போட்டியாக சீனாவைச் சேர்ந்த ஏப்ருத்திஸ் என்ற பூனை தற்போது சுமை தாங்கியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !