சுகாதார அமைச்சு மற்றும் அதன் இணை நிறுவனங்களில் கடமையாற்றி வரும் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடாத்தும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும். முறைப்பாடுகள் குறித்து சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. விசாரணை நடாத்தும் அதிகாரிகளுக்கு தொழிற்சங்கங்களினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பலர் பேசினாலும் இதுவரையில் அதற்கு எதிராக எவரும் நடவடிக்கை எடுத்ததில்லை.
வீடுகளை விடவும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.
டை கோர்ட் அணிந்து கம்பீரத்துடன் இருக்கும் அதிகாரிகள் செய்யும் இழி செயல்களை நாம் அறிவோம். குற்றச் செயல்கள் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்ற காரணத்தினால் எதிர்காலத்தில் பொலிஸாரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கருத்தரங்கொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !