நேற்று செவ்வாய்கிழமை மாலை ஏறாவூரைச் சேர்ந்த 55 வயதுடைய முஸ்லிம் இரும்பு வியாபாரியொருவர் சித்தாண்டி பொது மயான காட்டுப்பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய நிலையில் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சித்தாண்டி விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வீட்டில் வீதியால் வந்து கொண்டிருந்தவேளை குறித்த வியாபாரி காட்டிற்குள் அழைத்துச் சென்று வல்லுறவிற்குட்படுத்தியதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வியாபாரி அடிக்கடி அந்த பிரதேசத்திற்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்தியதிகாரியின் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை எறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் திங்கட்கிழமை மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் 12 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சிறுவர் பராமரிப்பு நிலையத்தினர் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சித்தப்பா இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறுமுகத்தான்குடியிருப்பு பாரதி வீதியை சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை தாயை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதையடுத்து ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக தாய் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இரண்டாது கணவன் மது போதையுடன் வந்து சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளார். இதை அறிந்த தாய் தனது மகளை மட்டக்களப்பு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்துள்ளார்.
சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுமி வழங்கிய தகவலையடுத்து நிலைய அதிகாரிகள் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்தியதிகாரியின் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வாழைச்சேனை கிண்ணையடிப் பகுதியில் மறந்திருந்த நிலையில் ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்ற தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கிரான் செனவிரெத்ன தலைமையில் ஆர்.புருசோத்தமன், ஜ.நழீம், ஆர்.எச்.பீரிஸ் உள்ளிட்ட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சித்தப்பா நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !